நவசக்தியை வணங்கும் நவராத்திரி விழாவினை எங்கள் பள்ளியில் கொலுப்படியில்
பொம்மைகளை அடுக்கி அலங்கரித்தும், எமது பள்ளி சிறார்கள் பக்திப் பாடல்களைப் பாடியும், ஆசிரியர்கள் தினமும் பூஜைகள் செய்தும், மித்ரா பள்ளிக் குழந்தைகள் ஸ்லோகங்கள் கூறிக் கடவுளை வணங்கியும் கொண்டாடினார்கள். மாணவர்கள் பக்திப் பாடல்களைப் பாடியதுடன் பாரம்பரிய நடனங்களையும் ஆடினர். துர்க்கை தேவியின் ஒன்பது அவதாரங்களையும், முருகன், கிருஷ்ணர், ராதையின் அழகான வேடங்களையும் அணிந்து வந்த காட்சி அனைவரையும் ஈர்த்தது. ஆரம்பப் பிரிவு சிறார்கள் மலர்த் தோரணம் மற்றும் பூந்தட்டு செய்து விழாவினைச் சிறப்பித்தனர். இவ்விழாவானது பக்தி, பாரம்பரியம் மற்றும் ஒற்றுமை உணர்வை உயிர்ப்பித்தது!!…. ஓம் சக்தி!! பராசக்தி!!



