எங்கள் பள்ளியில் பாரதியாரின் பிறந்தநாள் விழா மழலையர் முதல் 8ஆம் வகுப்பு
வரை மாணவர்கள் பங்கேற்று, வேடம் புனைதல், பாடல்கள்-கவிதைகள், கட்டுரை,
புதிய ஆத்திசூடி மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் மிகச் சிறப்பாகக்
கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சி மாணவர்களிடையே பாரதியாரின் சிந்தனைகள், தேசப்பற்று
மற்றும் சமூக மாற்றக் கருத்துகளை ஆழமாக விதைத்தது.




