மாணவர்களுக்கான கோலப் போட்டி மார்கழித் திருவிழாவின் ஒரு பகுதியாக
எங்கள் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. மாணவர்கள் வண்ணங்களும
பாரம்பரிய வடிவங்களும் கொண்டு தங்கள் கலைத் திறன் மற்றும்
படைப்பாற்றலை அழகாக வெளிப்படுத்தினர். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்
இணைந்து நடைபெற்ற பஜனை நிகழ்ச்சி விழாவிற்கு ஆன்மீகச் செம்மையும் பக்தி
உணர்வையும் சேர்த்தது.
மார்கழித் திருவிழாவின் ஒரு பகுதியாக, பெற்றோர்களின் பங்களிப்புடன்
நெருப்பில்லா, மின்சாரமில்லா சமையல் போட்டி மகிழ்ச்சியும் உற்சாகமும்
நிறைந்த வகையில் நடைபெற்றது. ஆரோக்கியம், படைப்பாற்றல் மற்றும்
பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில்
பெற்றோர்கள் தயாரித்த உணவுகள் அனைவரையும் கவர்ந்தன; இது
பெற்றோர்களின் சமையல் திறமை மற்றும் ஆர்வத்தை வெளிப்படுத்தும் சிறந்த
மேடையாக அமைந்தது. திரு. டேவின் சாமுவேல்(JD catering service) மற்றும்
திருமதி டி. திவ்யா, CEO, (அமிழ்தம் ஆர்கானிக் அங்காடி) ஆகியோர் நடுவர்களாக
கலந்து கொண்டு, தங்களது மதிப்பீடுகளால் நிகழ்வை மேலும் சிறப்பித்தனர்.







