பெருந்தலைவர் காமராசரின் 124-ஆவது பிறந்தநாள் –15.07.2026

பெருந்தலைவர் காமராசரின் 124-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, எம் பள்ளியில்
சிறப்பான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மழலையர் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு
வரை உள்ள மாணவர்களுக்கு பல்வேறு படைப்பாற்றல் மற்றும் விழிப்புணர்வு
செயல்பாடுகள் நடத்தப்பட்டன. மேலும், தொடக்கப் பள்ளி மாணவர்களின்
வாசிப்பை, சிந்தனையை, திறமைகளை மெருகேற்றும் வாய்ப்பாக தமிழ் வளர்ச்சி
மன்றம், English Club மற்றும் Quiz Club ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வின் மூலம் மாணவர்கள் காமராசரின் கல்விச் சேவை, எளிமை மற்றும்
தலைமைப் பண்புகளை அறிந்து கொண்டனர்.