பொங்கல் விழா

புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழர்த்திருநாளாம் பொங்கல்
விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்குக்
கயிறுழுத்தல், சாக்குப் போட்டி உட்பட பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள்
நடத்தப்பட்டன. மேலும், மாணவர்களின் ஒயிலாட்டம், கரகாட்டம்,
தப்பாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம் போன்ற கிராமியக்
கலைநிகழ்ச்சிகளும் கிராமியப் பாடல்களும், நாடகமும் நிகழ்த்தப்பட்டன.
விவசாயத்திற்கும் விவசாயிக்கும்  மதிப்பளித்து, எதிர்கால இந்தியாவின்
தூண்களாக விளங்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வுக் கொண்டாட்டமாக
அமைந்திருந்தது இவ்விழாவின் சிறப்பாகும். விழாவில் பள்ளியின் KG வகுப்பு
முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆசிரியப்
பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பள்ளியின் தாளாளர் திருமதி.
புஷ்பலதா பூரணன் அவர்களும் பள்ளி முதல்வர் திரு . ஹாரிசன்
ஜெபக்குமார் அவர்களும் விழா ஏற்பாட்டினைச் செய்திருந்தனர்.